தோற்றம் 02 DEC 1946 / மறைவு 15 FEB 2025
யாழ். வண்ணார்பண்ணை பிரப்பங்குளம் வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட உமாதேவி விக்னேஸ்வரன் அவர்கள் 15-02-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரராஜா சாயாதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராஜா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா விக்னேஸ்வரன்(ஓய்வு பெற்ற உதவிப் பிராந்திய முகாமையாளர் மக்கள் வங்கி) அவர்களின் அன்பு மனைவியும்,
வாகீஸ்வரன், வினோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், ஜெயராஜா மற்றும் விக்கினராஜா, குகராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, நகுலாம்பிகை மற்றும் பரமேஸ்வரி, சத்யபாமா, சரோஜினிதேவி, காலஞ்சென்ற ரதி மற்றும் கமலா, நிர்மலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிருந்தா, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திசோன், ரோஷி, ஹனி, ரம்யா, ரேகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
உடன்பிறவா உறவினர்களின் அன்பிற்குரியவரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 17-02-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
12B, 5/2, ஸ்டேசன் றோடு,
வெள்ளவத்தை,
கொழும்பு.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நடராஜா விக்னேஸ்வரன் - கணவர்
Mobile : +94778629458
Phone : +94112552951