காலமானார்
விசாகபூஷணம் முருகையா
(ஓய்வுபெற்ற உப அதிபர், முன்னாள் ஆசிரிய ஆலோசகர், இலங்கை;தமிழாசிரியை, கனடா)
இலங்கை மூளாயைச் சேர்ந்தவரும், கனடாவின் மொன்ரியால், ரொறன்ரோ நகரங்களை வதிவிடமாகக் கொண்டிருந்தவருமான விசாகபூஷணம் முருகையா கடந்த 17-01-2025 அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் கனடாவைச் சேர்ந்த காலஞ்சென்ற 'முத்தமிழ்க் கலாவித்தகர்' திரு. நாராயணர் முருகையா (ஓய்வுபெற்ற அதிபர், இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கந்தையா, பாக்கியம் தம்பதியரின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாராயணர்-சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், நாராயணமூர்த்தி (கனடா), ஜெகதாம்பிகை (கொழும்பு), லலிதாம்பிகை (கனடா), விசாகதாசன் (கனடா), சாரதா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், கிருபானந்தமூர்த்தி (கொழும்பு), விஜயநாதன் (கனடா), ஜெனிற்றா ஜெயந்தி (கனடா) ஆகியோரின் மாமியாரும், ரமேஷ் ரெமி, பவித்ரா, அரவிந்தன், லக்ஷ்மி, லக்ஷனா, கௌதம், லக்ஷியா, நிவேதன், தபோதன், பிரதீபன், வர்ணப்பிரியா, பிரித்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சஷ்மிதா, அதர்வா, அச்சிதா, யாஷவ், ஐரா ஆகியோரின் பூட்டியும், விசாகரத்தினவேல் (மூளாய்), லோகேஸ்வரி மரியதாசன் (யாழ்ப்பாணம்), சரவணபவன் (நவாலி), கோமதிதேவி செல்வநாதன் (நல்லூர்) சயலொளிபவன் (பிரான்ஸ்) ஸ்கந்தமலர் குகதாசன் (பிரான்ஸ்), குகபூஷணி இராமலிங்கம் (சுழிபுரம்), கோடீஸ்வரி சோமசுந்தரம் (ஜேர்மனி), ஸ்ரீகௌரி அல்போன்ஸ் (இங்கிலாந்து), கீதா சிவபாதம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான நல்லூரடியான், கிருஷ்ணசாமி, தில்லைவனம், சிவசிதம்பரம், விநாயகமூர்த்தி, வெள்ளிமலை ஆகியோரின் மைத்துனியும் ஆவர்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.