TamilsGuide

திருமதி வடிவாம்பாள் சீவரத்தினம்

பிறப்பு 08 FEB 1937 / இறப்பு 11 DEC 2024

கொழும்பு அவிசாவளையைப் பிறப்பிடமாகவும், கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவாம்பாள் சீவரத்தினம் அவர்கள் 11-12-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமகிருஷ்ணன் முத்துலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா சீவரத்தினம்(Accountant) அவர்களின் அன்பு மனைவியும்,

மாலினி(இலங்கை/கனடா), உதயராணி(இங்கிலாந்து), சந்திரமோகன்(ஜேர்மனி), சுந்தரராஜன்(பிரான்ஸ்), இந்திரா(கனடா), யோகராஜ்(இங்கிலாந்து), சுரேஷ்குமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகராஜா, நடராஜா, ரேணுகா, சந்திரவதனா, ஸ்ரீசுந்தர், செல்வினி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விமலரத்தினம்(மணி) அவர்களின் அன்புச் சகோதரியும், அருந்ததி அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஜனனி, ரூபினி, மயூரி, காயத்ரி, வினுஜா, ரம்யா, ரிஷாந்தினி, வினோதினி, சிவாஹினி, நிவேதன், கோகுல், சௌமியா, பிரியங்கா, நிவேதா, மதுசன், தனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷியாம், ஹரிஷ், ஹாஷினி, கிஷான், அஞ்சனா, கதிர், கிருஷ்னி, துவாரக், ரிஷிக், ஜான்வி, யாத்ரன், தீரன், விஹான், ரியா, தியா, அர்ஜுன், லியா, அஞ்ஞான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-12-2024 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை Mahinda Parlour, Mount Lavinia எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாலினி யோகராஜா - மகள்

    Mobile : +94770416464

Leave a comment

Comment