திருமதி கமலா நல்லதம்பி
பிறப்பு 15 SEP 1935 / இறப்பு 26 SEP 2024
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா நல்லதம்பி அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பழனிவேல் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் நல்லதம்பி அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்றவர்களான கலாவதி, ஸ்ரீதேவன் மற்றும் ஜெயதரன், சாந்தி(பிரித்தானியா), ஜனகன்(ஓய்வுநிலை அதிபர்), சுமதி, ஸ்ரீதரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணிதேவி, ஆனந்தி, ஶ்ரீதரன்(ஜேர்மனி), அனுசுயா(ஓய்வுநிலை ஆசிரியர்), சகாதேவன்(பிரான்ஸ்), நிரஞ்சனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், கணேஸ் மற்றும் சுந்தரலிங்கம்(ஓய்வுபெற்ற திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலகம், திருகோணமலை), காலஞ்சென்ற மகாலிங்கம், இந்திராணி, தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லத்துரை, இராசையா, பொன்னுத்துரை, செல்லம்மா, சோமசுந்தரம், கனகரத்தினம், முத்துலிங்கம், இராசலிங்கம், நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாமந்தி - நிரஞ்சன், சுமித்திரா, மைத்திரேயி - ஜெயலக்ஷன், அபிராம், சாரங்கன் - வித்தியப்பிரதா, ஆதித்தியா, வைஷ்ணவி, கஸ்தூரி, லாவண்யா, கோகுலன், செந்தூரன், நிலக்சனா, கேஷயன், நிலக்சயன், ஆராதனா, ஆருத்ரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரிஹான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 14, சாரதா வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜனகன் - மகன்
Mobile : +94771963836
ஶ்ரீதரன் - மகன்
Mobile : +447903946890
சுமதி - மகள்
Mobile : +94740500553
சாந்தி - மகள்
Mobile : +447578728067
சுந்தரலிங்கம் - சகோதரன்
Mobile : +94774137763
தவமணிதேவி - மருமகள்
Mobile : +94775433049
Leave a Reply