Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

நினைவஞ்சலி

அமரர் சுப்பையா செல்லத்துரை

பிறந்த இடம்
: யாழ். சுதுமலை
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 1924-09-22
மறைவு
: 2016-03-14

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பையா செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

“பற்றினாற் பிறந்து இறந்து பாரினால் சுழன்றாயந்தப்
பற்றினை விட்டுப் போனாய் நேயமாய் பரமன் தான் தஞ்சமென்று”

விழுதெறிந்தோங்கி வளர்ந்து நிழலளித்த ஆல மரமாய் நீ நின்றாய்
ஆண்டொன்று சென்றாலும் உந்தன் பிரிவினில் பிறந்த வேதனை
எங்கள் ஜென்மம் இருக்கும் வரை மாறாது ஐயா!
 
மொட்டாக பூவாக காயாக நற்பழமாக பயன் தந்து
தொண்ணூற்றிரண்டாண்டுகள் இவ் வையமதில் நீவாழ்ந்து
இன்ப துன்பமனைத்திலும் உவந்தும் உழன்றும் - எம்
உறவையெல்லாம் அன்பால் இணைத்தாய்
காலத்தின் சுழற்சியாலும் தெய்வ நியதியாலும்
கணப்பொழுதில் எமைப் பிரிந்து பரமனுடன் கலந்து விட்டாய்!

கருக் கொண்ட நாள் முதல் உருக் கொண்டு வாழ்ந்த
உயிர் பிரியும் கணத்தினிலும் பரம்பொருளின் சிந்தையுடனே
உண்மை நெறி நின்று உன்னத தலைவனாய்
உயரிய தந்தையாய், உயர்தகு ஆசிரியனாய்
ஆத்மீகம், கடமை, கல்வி, கலை, கட்டுக்கோட்புடனே
எமையென்றும் வழிநடத்தி ஏற்றி விட்டாய் வாழ்வு மேலோங்க!

ஒன்றென்ன ஓராயிரமாண்டுகள் தான் ஆனாலும்
என்றென்றும் எம் உள்ளம் தனில் நீயிருப்பாய்
உன் சந்ததியினரை ஆசீர் வதித்திடுவாய்!

சுதுமலை அம்மன் உவந்தளித்த செல்வ மகனே!
மண்ணின் பெருமையை மனமறிந்துணர்ந்து மகிழ்வோடுழைத்து
ஆசிரியர் தொழிலை ஆசையோடேற்று - ஆற்றல் மிகு
நல்மாணவரை வருங்கால சமுதாயத்திற்கு நல்கி
தெய்வத்தின் அருள் நாடி தலயாத்திரைகள் சென்று
அவதார புருஷோத்தமன் ஸ்ரீராமன் கால் பதித்த
அயோத்தியிலே நீ நடந்து கங்கைதனில் நீராடி
ஹரித்துவார், ரிஷிகேஷ், காசி விஸ்வநாதனையும் தரிசித்து
அக மகிழ்ந்து வாழ்ந்த அந்த இனிய பொற்காலங்கள் தான் மறந்திடுமா?

ஆத்மீக வழி நாடி சற்குருவின் கிடைத்தோர்க்கரிய
கடைக்கண்பார்வை கண்டு சரணடைந்து
மானிட ஜனனத்தின் மகத்துவத்தை நன்குணர்ந்து
ஞானப்பாலாம் சற்சங்கம் எம்முடனே அள்ளிப்பருகி
எங்கெங்கும் நிறைந்து நிற்கும் ஓம் கார நாயகனை
தியான வழிமுறை தவறாது உள்ளுணர்ந்து
இப்புவி வாழ்வினை பரிபூரணமாய் அனுபவித்தீர் - இன்று
உங்கள் ஜீவாத்மாபரமாத்மாவுடன் ஐக்கியமாகிவிட்டதுவே
“ஜனன மரணமில்லை ஆத்மாவிற்கே”

Realize what a gift you have been given.
Understand the beauty that is dancing in front of your very eyes.
Don't wait !! This is your time.
Grab the request for peace in your heart !
find that contentment in your life.
That's what peace is.
Peace is beautiful.
Peace is real.
Peace is that passion for existence,
a feeling, an understanding of what life means
what every day means,
what every hour means,
what every breath means.

-Prem Rawat-

அழியாத நின்நினைவுகளை சுமந்து விழிசிந்தும் நீருடன் வாழும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
பெறாமக்கள், மைத்துனன், மைத்துனிகள்!

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராசமணி செல்லத்துரை — கனடா
தொலைபேசி:    +15147350352
செல்வராஜன் செல்லத்துரை — கனடா
தொலைபேசி:    +15147350799
செல்லிடப்பேசி:    +14164995101
வித்தியாதரன் செல்லத்துரை — கனடா
தொலைபேசி:    +15147350352
மணிமேகலா புவேந்திரலிங்கம் — கனடா
தொலைபேசி:    +19052012714
மணிமேகலை யோகரமணன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி:    +61398590985