Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

நினைவஞ்சலி

அமரர் பரமேஸ்வரி கோணேசபிள்ளை

பிறந்த இடம்
: யாழ். கரம்பொன்
வாழ்ந்த இடம்
: கனடா
தோற்றம்
: 1941-01-15
மறைவு
: 2017-02-07

31ம் நாள் நினைவஞ்சலி

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அகிலத்தில் ஏது இணை உனக்கு அம்மா - நீ
எம்மருகில் இருக்கையில் ஏதுகுறை எமக்கு
இணையில்லா தெய்வமே எம் தாயே - உனை
நினைக்கையில் வெம்பி மனம் துடிக்கின்றோம்

அருகிருந்து ஆறுதல் கூற
மீண்டும் வரமாட்டீரோ- உம்
நினைவுகளை என்றும் இதயத்தில்
வைத்துப் பூசிப்போம்-  ஆதி
சக்தியாக எமை வழிநடத்தி
செல்வீர்கள் அன்னையே!

உங்கள் ஆன்மா நிம்மதியாக இறைவன்
திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.

எங்கள் பாசத்தின் திருவுருவே "அம்மா" எனும் குடும்ப குல விளக்கு மறைந்த செய்திக் கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் வார்த்தை கூறி எமது துயரத்தில் பங்கேற்ற உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கும் நேரில் கலந்துகொள்ள முடியாமல் தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் தங்கள் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையம் சாத்தியும், கண்ணீர் அஞ்சலிப்பிரசுரம் வெளியிட்டும், அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் எம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

அன்னாரின் 31ம் நாள் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 11-03-2017 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Sri Sathya Sai Baba Centre, 5321 Finch Ave East, Scarborough, ON M1S 5W2, Canada எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜீவா — கனடா
தொலைபேசி:    +14163196814
சுரேஸ் — கனடா
செல்லிடப்பேசி:    +14165400485
ரமேஸ் — கனடா
செல்லிடப்பேசி:    +16477687398
கோணேசபிள்ளை — கனடா
செல்லிடப்பேசி:    +16478534194