Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

மரண அறிவித்தல்

கலாநிதி விஜயகுமார் சின்னத்துரை

பிறந்த இடம்
: யாழ்ப்பாணம் உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
: ரொரன்ரோ
தோற்றம்
: 0000-00-00
மறைவு
: 2017-03-31

ரொரன்ரோ பல்கலைக்கழக பொறியியல்துறை பேராசிரியர் கலாநிதி விஜயகுமார் சின்னத்துரை அவர்கள் வெள்ளிக்கிழமை மார்ச் மாதம் 31ந் திகதி காலமானார்.

அன்னார் யாழ்ப்பாணம் உடுப்பிட்டியை சேர்ந்த காலஞ்சென்ற ஆசிரியர் ஆறுமுகம் சின்னத்துரை, 

துன்னாலையை சேர்ந்த காலஞ்சென்ற ஆசிரியை திருமதி நாகரட்னம் சின்னத்துரை ஆகியோரின் அன்பு மகனும், 

வத்சலாவின் அன்புக்கணவரும், சனகனின் அன்புத்தந்தையும், 

அனுஷா (கொழும்பு),தயாவதி (அவுஸ்திரேலியா), ரவிகுமார் (கொழும்பு), அனுராதா (அவுஸ்திரேலியா),  வைத்திய கலாநிதி மித்திரகுமார் (கொழும்பு) ஆகியோரின் அன்புச்சகோதரனும், 

காலஞ்சென்ற கலாதேவன், மற்றும் விஜயகுலேந்திரன், சுவர்ணா, சிறிகுமார், மீனகுமாரி, மற்றும் ஐங்கரன், சுரவரன், மதி ஆகியோரின்மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 

இலக்கம் 8911 Woodbine Avenue, Markham  என்னும் முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home  இல், ஏப்ரல் மாதம் 2ந் திகதிஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியிலிருந்து 9 மணி வரையும், 

பின்னர் மறுநாள் 3ந் திகதி திங்கட்கிழமை காலை 9மணியிலிருந்து 11 மணிவரையும்பார்வைக்கு வைக்கப்பட்டு, 

பின்னர் 11மணியிலிருந்து 11:30 மணிவரையும் ஈமைக்கிரியைகள் நடாத்தப்பட்டு, பகல் 12 மணிக்கு

 12492 Woodbine Avenue இல்உள்ள HighlandHills  மயானத்தில் தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.

 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

குடும்பத்தினர் 

416-539-0880,  416-458-9305

அனுராதா - 647-885-5760