TamilsGuide

விவசாய அமைச்சர் ஈரானுக்கு விஐயம்

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று ஈரானுக்கு பயணமாகியுள்ளார்.

தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த அவர் அங்கு பயணமாகியுள்ளதுடன் அங்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஈரானின் விவசாய அமைச்சர் மொஹமட் அலி நிக்பக்ட்டை சந்திக்க உள்ளார்.

இதில் அமைச்சர் மொஹமட் அலி நிக்பக்டுடனான சந்திப்பில் புதிய விவசாய தொழில்நுட்ப பரிமாற்றம் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை அமைச்சர் மகிந்த அமரவீர EXPO இல் பங்கேற்பதில்லை என முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், ஈரான் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க கண்காட்சியில் கலந்து கொண்டுளுமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment