TamilsGuide

தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்

வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது.

தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment

Comment