TamilsGuide

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது.

கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.

புனித மாதாக்கள் போன்று வேடமணிந்து அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இதன்போது மன்னார் ஆயர், அருட்தந்தையர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து விசேட வழிபாடு இடம்பெற்றதுடன், மாவட்டத்தின் பல பிரதேசங்களிற்கும் திருச்சொருப பயணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மடுமாதா முடிசூடப்பட்டு 100வது ஆண்டு நிறைவையொட்டி குறித்த திருச்சொருப தரிசனம் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

அத்துடன் 1999ம் ஆண்டு 75ம் ஆண்டு பூர்த்திக்காக இவ்வாறு பயணம் மேற்கொள்ளப்பட்ட நிலையில்
யுத்தம் காரணமாக கிளிநொச்சி நகர் உள்ளிட்ட சில பகுதிகளிற்கு சென்றிருக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a comment

Comment