TamilsGuide

உமா ஓயா திட்டத்திற்கு உரிமை கோரும் பொதுஜன பெரமுன

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய பங்காற்றியிருந்த நிலையில் இன்றைய நாளில் அவரை கௌரவத்துடன் நினைவு கூர்வதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்தத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை வரலாற்றில் இன்று தீர்மானமிக்க ஒரு நாளாகும். ஈரான் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் 2011 ஆம் ஆண்டில் இந்த தி;ட்டத்தை ஆரம்பிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ பாரிய பங்காற்றிய ஒருவர்.

இன்றைய நாளில் நாம் அவரை கௌரவப்படுத்துகின்றோம். உமா ஓயா திட்டம் தொடர்பில் பேசுகையில் இந்த திட்டம் தொடர்பாக அரசியல் லாபம் கருதி மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்வைப்பதற்கு முயற்சித்த பலர் தேசிய மக்கள் சக்தியில் உள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன மேலும் தெரிவித்தார்.
 

Leave a comment

Comment