TamilsGuide

கொழும்பில் சங்கராஜ மாவத்தைக்கு அருகே மரம் முறிந்து விபத்து

கொழும்பு, சங்கராஜ மாவத்தைக்கு அருகில் உள்ள விகாரை ஒன்றின் அரச மரக்கிளை திடீரென  முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஸ்ரீ சங்கராஜ விகாரையின் அரச மரக்கிளையே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. குறித்த விபத்தில்  லொறி ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை விபத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தையடுத்து அப்பகுதியில்  கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Comment