TamilsGuide

கனடாவில் வருமான ஏற்றத்தாழ்வு வீழ்ச்சி

கனடாவில் வருமான ஏற்றத்தாழ்வு நிலைமை வீழ்ச்சி அடைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிகளவு வருமானம் ஈட்டுவோருக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டுவோருக்கும் இடையிலான இடைவெளி பெருமளவு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2015ம் ஆண்டின் பின்னர் இந்த இடைவெளி கடந்த ஆண்டில் அதிகளவில் உயர்வடைந்துள்ளதோடு, உயர் வட்டி வீதங்கள் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டுவோர் அதிகளவில் செலவிட நேரிட்டுள்ளது.

செல்வந்தர்களின் சொத்துக்கள் காரணமாக வருமானம் அதிகளவில் கிடைக்கப் பெறுவதாகவும், குறைந்த வருமானம் ஈட்டுவோரது வருமானம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிக வருமானம் ஈட்டுவோரின் வருமானம் 6 வீதமாக அதிகரித்துள்ள அதேவேளை, குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வருமானம் வெறும் 0.3 வீதத்தினால் மட்டும் அதிகரித்துள்ளது. 
 

Leave a comment

Comment