TamilsGuide

கல்லூரி படிப்பில்லை... 18 வயதில் வேலைக்கு சேர்ந்த நபர் - இன்று சம்பளம் 10 கோடி 

தற்போது 30 வயதாகும் பிரித்தானியர் ஒருவர் கல்லூரி படிப்பு இல்லை என்றாலும் ஆண்டுக்கு ரூ 10 கோடி சம்பளமாக பெறுகிறார்.

பிரித்தானியரான Ben Newton என்பவர் 12 ஆண்டுகளுக்கு முன்னர் Deloitte நிறுவனத்தின் பயிற்சி திட்டம் ஒன்றில் இணைந்துள்ளார். 2023ல் இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் ஆனார்.

பாடசாலை படிப்பை பாதியில் கைவிடுவோருக்கான Deloitte நிறுவனத்தின் பயிற்சி திட்டத்தின் முதல் பங்குதாரராகவும் ஆனார். தற்போது 30 வயதாகும் பென் நியூட்டன் Dorset பகுதியில் பிறந்து வளர்ந்தவர்.

இவரது தந்தை 16 வயதில் பாடசாலை படிப்பை விட்டுவிட்டு, ராணுவத்தில் இணைந்தார். தாயாரும் மதுபான விடுதியில் பணியாற்றியவர் பின்னர் பயண முகவராக மாறினார்.

வார்விக் பல்கலைக்கழகம் கணிதவியல் பாடத்தில் இணைய நியூட்டனுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் அதை நிராகரித்து விட்டு Deloitte நிறுவனத்தின் பயிற்சி திட்டத்தில் இணைய முடிவு செய்துள்ளார்.

இதனால் இளம் வயதிலேயே பணம் சம்பாதிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது, ஆடிட்டராக பணிபுரிந்து வருவதோடு, தகுதியான கணக்காளராகவும் உள்ளார். ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கிறார்.

வார்விக் பல்கலைக்கழகம் கணிதவியல் படிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசியுள்ள நியூட்டன், அது தொடர்பில் தாம் தீவிரமாக ஆய்வு செய்ததாகவும், அப்போது பணம் சேமிக்கும் பொருட்டு சில நிறுவனங்களில் வேலை பார்த்து வந்ததாகவும், ஆய்வின் முடிவில், பல்கலைக்கழகத்தில் சேரும் முடிவை கைவிட்டதாகவும் நியூட்டன் கூறியுள்ளார்.

சில நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுக்கு சென்றதாகவும், அதில் ஒன்று Deloitte என குறிப்பிட்டுள்ள நியூட்டன், பல்கலை படிப்பு முடித்தாலும், இதே நிலையை எட்டலாம், ஆனால் தமப்பு பொறுமை இல்லை என குறிப்பிட்டுள்ள நியூட்டன், வேலைக்கு சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

பல்கலை படிப்புக்கு நிகராக திறன் மேம்படுத்தும் பயிற்சிகளை Deloitte நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. அதாவது கல்லூரியில் சேர விரும்பாத நபர்களைக் கண்டறிந்து அவர்களின் தனித் திறமையை விரிவுபடுத்துவதும் வேலைக்கும் உத்திரவாதம் அளிக்கிறது.

மட்டுமின்றி, பிந்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்னணியில் இருந்து அதிகமானவர்களை தொழில்முறை அமைப்புகளில் பங்கேற்க ஊக்குவிக்கிறது.

Leave a comment

Comment