TamilsGuide

26 வருட மர்மம் -பிரித்தானியாவில் குழந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்

1998ஆம் ஆண்டில் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் கொலை வழக்கில் பிரித்தானிய பெண் கைது செய்யப்பட்டார். கடந்த 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம், woodlandஇல் உள்ள Warrington பார்க்கிற்கு அருகில் அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குழந்தைக்கு அதிகாரிகள் "Callum" என்று செல்லப் பெயர் சூட்டினார்கள், இது தொடர்பாக கொலை வழக்கு விசாரணை தொடங்கப்பட்டாலும், பல ஆண்டுகளாக இந்த வழக்கு தீர்க்கப்படாமல் இருந்தது.
  
2023 ஜூலை மாதம், இந்த வழக்கு தொடர்பாக லிவர்பூலைச் சேர்ந்த ஒரு ஆணையும் பெண்ணையும் காவல்துறை கைது செய்தது.

ஆனால் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர், இந்நிலையில், திங்கட்கிழமை லிவர்பூலை, சேர்ந்த 54 வயதான Joanne Sharkey என்ற பெண் மீண்டும் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

அவர் செவ்வாய்க்கிழமை Warrington நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியுள்ளது.

Cheshire காவல்துறையின் Major Crime Review Team இன் துப்பறியும் அதிகாரி Hannah Friend, இந்த வழக்கின் உணர்ச்சிபூர்வமான தன்மை மற்றும் கடந்து சென்ற கணிசமான நேரத்தை ஒப்புக்கொண்டார். Joanne Sharkeyக்கு நியாயமான விசாரணை கிடைப்பதை வலியுறுத்தி, பொதுமக்கள் இணையத்தில் ஊகங்களைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக கைது செய்யப்பட்ட நபர் குற்றச்சாட்டு எதுவும் இன்றி விடுவிக்கப்பட்டார், மேலும் இந்த விசாரணை தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை என்று செஷயர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த முன்னேற்றம், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கும், இந்த வழக்கை விடாமல் கடைசி வரை கொண்டு சென்ற துப்பறியும் அதிகாரிகளுக்கும் கால் நூற்றாண்டுக்கு பிறகு ஒரு முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. 
 

Leave a comment

Comment