TamilsGuide

வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் காலமானார்

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் உடல்நலக் குறைபாட்டால் நேற்று  காலமானார்.

அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவர் இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த இரண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்டு, வலி. மேற்கு பிரதேச சபையில் இரண்டு தடவைகள் தவிசாளராக பதவி வகித்திருந்தார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment