TamilsGuide

கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை

கனடா மக்கள் இஸ்ரேல் நாட்டிற்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த தகவல் கனேடிய வெளிவிவகார அமைச்சினால்  விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

 பிராந்திய வலயத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற பாதுகாப்பு நிலைமைகளினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாகவும், மேற்கு கரையில் வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிராந்திய வலயத்தின் பாதுகாப்பு நிலைமை எதிர்வுகூற முடியாத நிலையில் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எந்த நேரத்திலும் நாட்டில் வன்முறைகள் வெடிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment