TamilsGuide

பொதுஜன பெரமுனவை பலப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம் - நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கீழ்மட்டத்திலிருந்து பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கட்சியை வலுப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வீடுகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட 04 விடயங்களை நாமல் ராஜபக்ச எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் பெண்கள் உட்பட மாவட்ட தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை நியமித்தல்,
வெற்றிகரமான மே தினப் பேரணியை நடத்தல்,

மே தினத்திற்குப் பின்னர் மாவட்ட மற்றும் வெளிப்புற கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தல்,

அரசியலமைப்பு விதிமீறல்களை கண்காணிக்கும் ஒழுங்குமுறைக் குழுவைச் செயல்படுத்தல் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சியால் பொதுஜன பெரமுன கடுமையான பின்னடைவை சந்தித்திருநதாகவும் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

தமது மக்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரமாண்டமான மே தினக் கூட்டத்தை இம்முறை நடத்தவும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment