TamilsGuide

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கே அரசாங்கம் முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தி

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் பிற்போடுவதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுடன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல் போன்றவற்றை பிற்போட்டதை போன்று ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

அவ்வாறு முயற்சிப்பார்களாயின் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட நிலை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஏற்படும்.

ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலை இலக்குவைத்து எந்தவொரு வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை.

எதிர்த்தரப்பு என்ற ரீதியில் நாட்டின் நலன்கள் தொடர்பாக சிந்தித்தே நாம் அனைத்து வேலைதிட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோல் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இந்த நாட்டில் மக்கள் நலன்சார்ந்த பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்.

எமது தலைவர் சஜித் பிரேமதாசவின் கொள்கைத் திட்டங்களையே தற்போதைய அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது” என நாடாளுடன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment