TamilsGuide

கண்டி மாநகரசபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கண்டி மாநகரசபை ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இன்று காலை மாநகர சபை வளாகத்திற்கு முன்பாக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

மத்திய சந்தைக்கு முன்பாக வைத்து மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரை வர்த்தகர் ஒருவர் தாக்கியுள்ளதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய சந்தைப் பகுதியை அண்மித்த பகுதியிலுள்ள பழக்கடைகளை அகற்றுமாறு மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் தெரிவித்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நிர்வாக அதிகாரி தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வாரத்திற்கு முன்னரும், குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவரும் தாக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இந்த நிலையில், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாநகரசபை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment

Comment