TamilsGuide

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டம் தொடர்பில் அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அரசியல் சபை கூட்டம் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இங்கு தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சியின் ஒழுக்காற்று சபைக்கு அதிகாரங்களை வழங்குவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Comment