TamilsGuide

கனடாவில் மருத்துவ சாதனங்கள் மீது விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கனடாவில் சில வகையான மருத்துவ சாதனங்களை பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று கனடா சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பாக அந்நாட்டு சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  
இவை உயிரிழப்பு உட்பட தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட சாதனங்களில் ஒன்று ஒமினிலெப் அட்வான்ஸ்ட் (OmniLab Advanced) என்ற கருவி. இது தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

பிற சில மருத்துவ சாதனங்களும் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட உள்ளன. நோயாளிகள் பயன்படுத்தும் சாதனங்கள் போலவே, சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் கருவிகளும் திரும்பப் பெறப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கனேடிய சுகாதார திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கையின் பிரகாரம்:

1. முடிந்தவரை இந்த மருத்துவ சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

2. ஏற்கனவே இந்த சாதனங்களை பயன்படுத்தி வந்தால், உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்தி, உங்கள் மருத்துவரை அணுகவும்.

3. இந்த சாதனங்களை பயன்படுத்தியதால் உங்களுக்கு ஏதேனும் பாதகமான விளைவுகள் ஏற்பட்டிருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். 
 

Leave a comment

Comment