TamilsGuide

வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்படும்-பிரசன்ன ரணதுங்க

யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து நலன்புரி நிலையங்களும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது மூன்று நலன்புரி நிலையங்கள் இயங்கி வருவதுடன், அங்குள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10 ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் மீள்குடியேற்றப் பிரிவினருடன் இணக்கப்பாட்டுக்கு வருமாறு பணிப்புரை விடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் நலன்புரி நிலையங்களில் அனுமதிக்கப்படாமல் மீள்குடியேற்றத்திற்காக 1502 குடும்பங்கள் இருப்பதாகவும் 212 குடும்பங்களுக்கு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்காலத்தில் அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment