TamilsGuide

ரகசியமாக காதலர் உடன் வெளிநாட்டு ரிசார்ட்டில் ராஷ்மிகா?

நடிகை ராஷ்மிகா மந்தனா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அவர்களுக்கு ராஷ்மிகா உருக்கமாக நன்றியும் கூறி இருக்கிறார். மேலும் ராஷ்மிகா தனது பிறந்தநாளை கொண்டாட துபாயில் இருக்கும் ஒரு ரிசாட்டுக்கு ராஷ்மிகா சென்று இருக்கிறார்.

துபாய் ரிசார்ட்டில் இருக்கும் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு தனது பிறந்தநாளை ராஷ்மிகா கொண்டாடி இருக்கிறார்.

அந்த வீடியோவின் தொடக்கத்தில் இரண்டு கைகள் மட்டும் காட்டப்படுகிறது, அது ராஷ்மிகாவின் காதலர் விஜய் தேவரகொண்டா தானா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். 
 

Leave a comment

Comment