TamilsGuide

இலங்கையில் புதிய தொலைக்காட்சி அத்தியாயம் மொனரா உதயமானது

ஸ்வர்ணவாஹினி ஊடக வலையமைப்புடன் இணைந்த மொனரா என்ற புதிய தொலைக்காட்சி சேவை இன்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

சர்வ மத வழிபாடுகளுடன் மொனரா தொலைக்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை, சுப வேளையில் கொழும்பில் நடைபெற்றது.

மகிழ்ச்சியாக வாழும் கலை – என்ற தொனிப்பொருளில் மொனரா தொலைக்காட்சியானது, இன்று முதல் தனது ஒளிபரப்பு நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

அதற்கிணங்க, இன்று காலை 09.47 எனும் சுப நேரத்தில் மொனரா தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இலங்கை ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்ற புத்திக விக்கிரமாதார இந்தத் தொலைக்காட்சியின் அலைவரிசை பிரதானியாக பெறுப்பேற்றுள்ளார்.

ஸ்வர்ணவாஹினி மீடியா வலையமைப்புடன்  இணைந்த ஒரு அலைவரிசையாகவே இந்த மொனரா தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவங்களைத் தரக்கூடிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யவுள்ளமை விசேட அம்சமாகும்.

அந்தவகையில், இளைஞர்களை கவரக்கூடிய சிறப்பு நிகழ்ச்சிகள் மொனரா தொலைக்காட்சியில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதோடு, பெண்கள்- சிறார்களுக்கான விசேட நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் இதில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன.

மொனரா தொலைக்காட்சியை இன்று முதல், கொழும்பில் UHF 29 இலும், கொங்கல்லையில் UHF 56 இலும், மடுல்சீமையில் UHF 56 இலும், நுவரெலியாவில் UHF 60 இலும், இரத்தினபுரியில் UHF 49 இலும், கம்துவயில் UHF 56 இலும் கண்டு களிக்க முடியும்.

அத்தோடு, அலைவரிசை எண் 104 இல் PEO TV ஊடாகவும், அலைவரிசை எண் 28 இல் FREESAT ஊடாகவும் நாடளாவிய ரீதியாக மொனரா தொலைக்காட்சி இன்று முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment