TamilsGuide

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

”அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் குறித்த கப்பல் தொடர்பாக இன்று கவனம் செலுத்தப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  அமெரிக்காவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த சிங்கப்பூர் கப்பலொன்று அண்மையில் அமெரிக்கா போல்டீமோர் பகுதியில் விபத்துக்குள்ளானது.

இந்த கப்பலில் 764 கொள்கலன்களில் பாரிய கழிவுத்தொகை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் காணப்பட்ட 56 கொள்கலன்களில் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கடற்பரப்புக்களில் இறக்குமதி – ஏற்றுமதி மற்றும் பரிமாற்றங்களின் போது மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இது மிகவும் மோசமான நிலையாகும். அமெரிக்காவின் போல்டீமோர் பகுதியில் குறித்த கப்பல் விபத்துக்குள்ளானதாலேயே இந்த கப்பல் இலங்கை நோக்கி பயணிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இல்லையெனில் எமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment