TamilsGuide

உண்மைகளை வெளிப்படுத்த கால அவகாசம் கோருவது நியாயமற்றது

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் கால அவகாசம் கோருவது நியாயமற்ற விடயமாகும்” என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” தற்போதைய ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் ஏன் இதுவரை சர்வதேச விசாரணை நடத்தப்படவில்லை.

இது பாரிய பிரச்சினையாகும். சுசில் பிரேமஜயந்த கூறுவது போன்று அன்று நாம் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களே ஆனால் அப்போது எதிர்த்தரப்பினர் என்ற ரீதியில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்னிறுத்துவதாகவும் எனவே அதற்கு மக்கள் ஆணையை வழங்குமாறு கோரியிருந்தீர்கள்.

இன்று 5 ஆண்டுகள் கடந்துள்ளன. இன்னும் நீதிநிலைநாட்டப்படவில்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் காலஅவகாசம் கோருவது நியாயமற்ற விடயமாகும்.அதற்கு உரிமையும் கிடையாது” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment