TamilsGuide

கனடாவில் அதிகரிக்கும் அரசியல்வாதிகளின் சம்பளம்

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (justin trudeau) உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளினதும் சம்பளங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த சம்பள அதிகரிப்பானது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் வருடாந்த சம்பளம் 389200 டொலர்களிலிருந்து 406200 டொலர்களாக அதிகரிக்கப்படவுள்ளது.

அதேவேளை, மத்திய அரசின் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் சம்பளங்களும் உயர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவின் வருடாந்த சம்பளம் 299,900 டொலர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வருடாந்த சம்பளம் 8500 டொலர்களினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், வருடாந்தம் ஏப்ரல் மாதத்தில் இவ்வாறு சம்பளம் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  
 

Leave a comment

Comment