TamilsGuide

28 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசி வழங்க நடவடிக்கை

நாட்டில் குறைந்த வருமானம் பெறுகின்ற 28 இலட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோகிராம் அரிசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளனர். கடந்த ஆண்டு, 28 லட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கினோம். அதேபோன்ற மாவட்ட அரசாங்க அதிபர்கள் மூலம் இதனை கணக்கிட்டு, 20 கிலோ அரிசியை வெளிப்படையாக வழங்குவோம்.

28 இலட்சம் குடும்பங்களுக்கும் இரண்டு கட்டங்களாக இதனை வழங்க உள்ளோம். ஏப்ரல் மாதம் 10 கிலோவும் மே மாதம் 10 கிலோ வங்க எதிர்பார்க்கின்றோம். சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் 10 கிலோ அரசியை வழங்கவுள்ளோம்.
இது அரசாங்கத்தின் பரந்த நோக்கமாகும்.

விவசாயிகளுக்கு இதன்மூலம் அதிக வருமானம் கிடைக்கும் விலையை உயர்த்துவது மறுபுறம் சிறிய மற்றும் நடுத்தர மில் உரிமையாளருக்கு வருமானம் ஈட்ட இது ஒரு சந்தர்பமாக அமையும்” இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment