TamilsGuide

பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் தேசியத் திட்டம் ஆரம்பம்

அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் முதலாம் தரம் முதல் 5 ஆம் தரம் வரையான அனைத்து மாணவர்களுக்கும், 100 இக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கும் இன்று முதல் காலை உணவு வழங்கும் தேசியத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மாணவர்களுக்கான காலை உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்காக அரசாங்கத்தினால் 16.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்றய தினத்திற்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநரின் செயளாளர் M.W.M.M. மடஹபொல தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment