TamilsGuide

ரஷ்ய இசை நிகழ்ச்சி தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம்

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவுக்கு அருகே இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் துப்பாக்கிக்காரர்கள் நடத்திய தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகளும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதுடன் 145 பேருக்கு மேல் காயமடைந்ததாக ரஷ்ய வேவுத்துறை தெரிவித்தது.
  
கோரத் தாக்குதலின் காட்சிகளைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை தாக்குதல் கோழைத்தனமானது என்று சொன்ன ஐக்கிய நாட்டு நிறுவனப் பாதுகாப்பு மன்றம் குற்றவாளிகள் நீதியின்முன் நிறுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியது.

கோரத் தாக்குதலின் காட்சிகளைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்று அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி கூறினார். தாக்குதலைக் கண்டித்த உக்ரேன் அதில் தனக்குத் தொடர்பில்லை என்று தெளிவுபடுத்தியது.

அதேசமயம் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கான அடிப்படைக் காரணத்தை விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்தியது பிரான்ஸ். அதேபோல அப்பாவி மக்கள் மீதான கொடூரத் தாக்குதல் இது என்று கண்டித்தது ஜெர்மனி.

மேலும், அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இத்தாலியப் பிரதமர் கூறினார். அதேவேளை ரஷ்யவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேறபதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

Leave a comment

Comment