TamilsGuide

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

பல்வேறு தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று காலை 11.22 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது என அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

Leave a comment

Comment