TamilsGuide

கனடாவில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

கனடாவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பினை பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடா முழுவதிலும் சராசரி பெற்றோலின் விலை கடந்த மார்ச் மாதம் உயர்வடைந்துள்ளது. ரொறன்ரோவில் கூடுதல் அளவில் எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
  
கடந்த வாரத்தில் மட்டும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 11 சதங்களினால் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை ரொறன்ரோவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 153.04 வீதமாக காணப்பட்டது.

தேசிய ரீதியில் சராசரியாக 4.7 சதத்தினால் பெற்றோலின் விலை அதிகரித்துள்ளது.

கேஸ்படி என்ற பெற்றோலியப் பொருள் ஆய்வு நிறுவனம் விலையேற்றம் குறித்த ஆய்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய மாகாணங்களை விடவும் ஒன்றாரியோ மாகாணத்தில் கூடுதல் தொகையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment