TamilsGuide

தந்தையுடன் மகள் வாக்குவாதம் - தாய் உயிரிழப்பு

கணவனும் மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியேறிய தாய் வீட்டின் முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்த  சம்பவம் யாழில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – தொல்புரம் கிழக்கை சேர்ந்த இராசரத்தினம் செல்வரதி என்ற 48 வயதான பெண்ணே  இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று குறித்த பெண்ணின்  வீட்டில்  அவரது கணவரும், மகளும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் விரக்தியடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில்  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதனைத்  தொடர்ந்து அவரது  சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்று வருபவர் என மரண விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment