TamilsGuide

இலங்கையர்கள் அறுவர் படுகொலை - குற்றவாளிக்கு விளக்கமறியல் நீடிப்பு

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையர்கள் அறுவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 19 வயதுடைய இளைஞன் தொடர்ந்தும் விளக்கமறியலில வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் புறநகர் பகுதியான Barrhaven இல் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயுடன் நான்கு பிள்ளைகள் உட்பட ஆறு பேர் படுகொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கொலைக்கான காரணத்தை இன்னும் தெரிவிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேக நபரால் தாக்கப்பட்டு உயிரிழந்த பிள்ளைகளின்  தந்தையான தனுஷ்க்க விக்கிமசிங்க தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த வழக்கினை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே சந்தேகநபரான Fabrio de Silva வின் உளநல அறிக்கை தொடர்பில் அறிக்கை தொடர்பில், ஊடகவியளார்கள் கேள்வியெழுப்பியபோது, அவர் சார்பான சட்டத்தரணிகள் உரிய பதில் அளிக்கவில்லை குறிப்பிடப்படுகின்றது.

சந்தேகநபர் தொடர்பான உளநல அறிக்கையை வழங்குவதற்கு சில மாதங்கள் ஆகும் என சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சந்தேகநபரான Fabrio de Silvaவின் YouTube கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Fabrio de Silva தனது யூடியூப் பக்கத்தில் Minecraft என்ற கணினி விளையாட்டின் காணொளிகளை தவறாமல் பதிவேற்றி வந்ததாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இந்த படுகொலை சம்பவத்தால், கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது என குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment