TamilsGuide

வாக்கெடுப்பில் சபாநாயகருக்கு எதிராக நாம் வாக்களிப்போம் – விஜித ஹேரத்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க தாம் தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்.

வாக்கெடுப்பில்சபாநாயகருக்கு எதிராக நாம் வாக்களிப்போம். கடந்த காலங்களில் சபாநாயகர் செயற்பட்ட விதம் மிகவும் தவறானது. பொலிஸ் மா அதிபர் நியமனம் விடயத்தில் அவர் செயற்பட்டமை சட்டவிரோதமானது.

சபாநாயகர் அரசியலமைப்பையும் நாடாளுமன்ற சிறப்புரிமைகளையும் மீறிசெயற்பட்டுள்ளார்” இவ்வாறு விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment