TamilsGuide

ஜப்பான்- நடுவானில் வெடித்துச் சிதறிய தனியார் ராக்கெட்

ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ராக்கெட்டை விண்ணில் ஏவ முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகள் அந்நிறுவனம் செய்து வந்தது.

ராக்கெட் ஏவுதல் பல்வேறு காரணங்களால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது. மத்திய ஜப்பானில் உள்ள வகயாமா என்ற மலைப் பகுதியில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

ஆனால் ராக்கெட் புறப்பட்ட சில வினாடிகளில் திடீரென்று நடுவானில் வெடித்து சிதறியது. இதனால் வானில் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. ராக்கெட்டின் பாகங்கள் கீழே விழுந்ததில் சில இடங்களில் தீப்பிடித்தது, தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

ஜப்பானில் முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்று ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இத்திட்டம் வெற்றி பெற்றிருந்தால் ஜப்பானில் ராக்கெட்டை விண்ணில் செலுத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் ஒன் நிறுவனம் பெற்றிருக்கும்.

ராக்கெட் வெடித்து சிதறியதற்கான காரணம் குறித்து அந்நிறுவனம் உடனடியாக பதில் அளிக்கவில்லை.
 

Leave a comment

Comment