TamilsGuide

ஒட்டிசுட்டான்- மாங்குளம் வீதியில் பொலிஸாரின் வாகனம் விபத்து

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனமொன்று நேற்றுமாலை ஒட்டிசுட்டான்- மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து, தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான் நோக்கி பயணித்த போதே  குறித்த வாகனம் தச்சடம்பன் பகுதியில் வைத்து வேகக்  கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment