TamilsGuide

ஜோதிகாவின் ரீஎன்ட்ரி படத்திற்கு கிடைத்த வரவேற்பு

பல வருடங்களுக்கு பிறகு நடிகை ஜோதிகா ஹிந்தி சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கும் படம் சைத்தான். இதில் அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோரும் நடித்து இருக்கும் இந்த படம் கடந்த மார்ச் 8ம் தேதி திரைக்கு வந்தது.
  
இந்த ஹாரர் திரில்லர் படத்திற்கு பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சைத்தான் படத்திற்கு முதல் மூன்று நாட்களில் 53.5 கோடி ருபாய் வசூல் வந்திருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது.

ஜோதிகாவின் ரீஎன்ட்ரி படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்து இருப்பதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 

Leave a comment

Comment