TamilsGuide

யாழ் பெரிய பள்ளிவாசல் - நிர்வாகத் தெரிவில் அதிருப்தி

யாழ் பெரிய பள்ளிவாசல்  நிர்வாகத் தெரிவை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எமது யாழ் பெரிய பள்ளிவாசல் 1967 ஆம் ஆண்டு சாதாரண ஒரு கொட்டகையாக அமைக்கப்பட்டு அதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினார்கள்.

1990 ஆம் ஆண்டு வெளியற்றப்பட்டு மீண்டும் 2002இல் மீண்டும் மீள்குடியேறி வந்து பார்த்தபோது பள்ளிவாசலை உடைந்த நிலைமையில் கண்டோம். பின்னர் அதனை பெரிய கஷ்டத்தின் மத்தியில் ஒவ்வொரு தனவந்தர்களிடமும் பண உதவி பெற்று பள்ளிவாசலை நாங்கள் புனரமைத்து இன்று அல்லாவினுடைய கிருபையினால் ஒரு மர்க்கசாக இருந்து கொண்டிருக்கிறது.

எனவே எங்கே பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களுடைய அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரே பள்ளியின் தலைவராக வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை.

எமது மக்கள் பாதிக்கப்பட்டு தற்போது மீள்குடியேளி இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான பள்ளிவாசல் நிர்வாகத் தெரிவை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இந்த தெரிவுகளை நடத்துபவர்களும் சரி முஸ்லிம் கலாசார தினைக்களத்தில் இருப்பவர்களும் சரி யோசிக்க வேண்டும், அவர்களுடைய ஊர்களில் பள்ளிவாசல் நிர்வாக தெரிவு நடந்தால் ஒரு வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நபரை தலைவராக நியமிப்பார்களா ஏன் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் இந்த நிலைமை,

அல்லாஹ்வுக்காக இந்த நிர்வாக தெரிவை உடனடியாக நிறுத்தி புனித ரமலான் நாளை ஆரம்பமாக உள்ளதால் ரமலான் முடிந்த பிறகு முஸ்லிம் கலாசார தினைக்கள அதிகாரிகள் முன்னிலையில் இந்த தெரிவை நடத்தி எதிர்காலத்தில் யாழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவி செய்வீர்களா என்று கேட்டுக்கொள்ளுகின்றேன் ” ,இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment