TamilsGuide

அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் அபாயம்

அதிக வெப்பம் காரணமாக கண் நோய்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக கண் மருத்துவ நிபுணர்கள் ​தெரிவித்துள்ளனர்.

சூரிய ஒளி நேரடியாக கண்ணில் பட்டால், அதன் செல்கள் சேதமடைவதுடன், விழிப்புலன் இழக்கப்படலாமென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர், கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெப்பம் காரணமாக கண் வறட்சி ஏற்படும் என்பதினால், தேவையான நீராகாரங்களை உட்கொள்வது அவசியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கணினி பாவனை அதிகம் உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே கண் நோய் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும் என கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர், கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் மதுவந்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment