TamilsGuide

உலகின் சிறந்த காபி - தென் இந்திய பில்டர் காபி-க்கு 2-வது இடம்

 'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் சமீபத்தில் உலகளாவிய 'காபி' தரம் மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தியது.

புகழ்பெற்ற 'உலகின் சிறந்த 38 காபிகள்' பட்டியலில் 'கியூபன் எஸ்பிரெசோ' முதலிடம் பெற்றது. இந்தியாவின் புகழ்பெற்ற தென் இந்திய 'பில்டர் காபி' 2-வது இடத்தை பிடித்தது.

'கியூபன் எஸ்பிரெசோ' என்பது கியூபாவில் தோன்றிய ஒரு வகை எஸ்பிரெசோ ஆகும். இது வறுத்த காபி கொட்டை,பழுப்பு சர்க்கரை பயன்படுத்தி இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட காபி. தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ள பில்டர் காபி ஒரு பாரம்பரிய காபி.

தரவரிசையில் உலகின் முதல் 10 இடங்களை பிடித்த காபிகளின் பட்டியல் வருமாறு:-

1. கியூபா எஸ்பிரெசோ (கியூபா)

2. தென்னிந்திய காபி (இந்தியா)

3. எஸ்பிரெசோ பிரெடோ (கிரீஸ்)

4. பிரெடோ கப்புசினோ (கிரீஸ்)

5. கப்புசினோ (இத்தாலி)

6. துருக்கிய காபி (துருக்கி)

7. ரிஸ்ட்ரெட்டோ (இத்தாலி)

8.பிராப்பே (கிரீஸ்)

9. ஈஸ்காபி (ஜெர்மனி)

10. வியட்நாமிய ஐஸ் காபி (வியட்நாம்)
 

Leave a comment

Comment