TamilsGuide

கரைச்சி புளியம்பக்கணை நாகதம்பிரான் ஆலயத்தில் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரைச்சி புளியம்பக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பங்குனி உத்திர பொங்கல்  நிகழ்வுகள் எதிர் வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகி 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பான முன் ஆயத்த கலந்துரையாடல் நேற்றைய தினம்  கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் தலைமையில், ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர், இலங்கை போக்குவரத்து சபையினர்,  கரைச்சி பிரதேச சபையினர், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினர், கிராம சேவையாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது  600க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக்காக கடமையில் ஈடுபடவுள்ளதாகவும், ஆலயத் திருவிழா காலங்களில் பொலித்தின் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய நடவடிக்கைகள் வழமை போன்று ஆலய நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Comment