TamilsGuide

தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்து விடும். 

தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்து விடும். அவர்கள் நடிப்பில் எந்த படம் வந்தாலும் பார்த்து விடுவார்கள். மற்ற நடிகைகளை விட ஜெயலலிதா மீது அதிக பாசமும் அக்கறையும் கொண்டவர் எம்ஜிஆர். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இருவரும் ஒரே கொள்கையில் இருக்கையில் ஜெயலலிதா ஒரு கட்டத்தில் எம்ஜிஆரை வெறுத்தார் என்றால் நம்ப முடிகிறதா? எப்படின்னு பார்ப்போமா…

ஜெயலலிதா என்டிஆருடன் கோபாலுடு கோபாலுடு படத்தில் ஜோடி சேர்ந்தார். இன்னொரு பக்கம் எம்ஜிஆருடன் குமரிப்பெண், சந்திரோதயம், ரகசிய போலீஸ் என நடித்தார். சிவாஜியுடன் மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் நடித்தார். கன்னட படங்களிலும் நடித்தார். மேஜர் சந்திரகாந்த் படத்தில் சிறிய வேடமாக இருந்தாலும் ஜெயலலிதாவின் நடிப்பு பேசப்பட்டது. ஜெயலலிதாவுக்கு கிளாமர் ரோலே கிடைத்த நிலையில், கண்ணன் என் காதலன் படத்தில் நல்ல ரோல் கிடைத்தது. 

முத்துச்சிப்பி படம் வந்ததும் தான் ஜெயலலிதாவுக்கு நடிக்க வரும் என்றே தெரிந்தது. சிவாஜியுடன் கலாட்டா கல்யாணம் படத்தில் செம மாஸான நடிப்பை வெளிப்படுத்தினார் ஜெயலலிதா. எங்கள் ஊர் ராஜாவில் ஜெயலலிதா சிவாஜியுடன் நடித்தார். ஆனால் சின்ன ரோல் தான். எம்ஜிஆர், ஜெயலலிதா கூட்டணி தான் பேசப்பட்டது.

சிவாஜி பட இயக்குனர் எம்ஜிஆர் படத்தை இயக்க மாட்டார். எம்ஜிஆர் படத்தில் நடித்த நடிகை சிவாஜி படத்தில் நடித்தால் மார்க்கெட் காலி என்றார்கள். கவிஞர்களும், யூனிட் ஆட்களும் அப்படித் தான் என்றாகி விட்டது. இந்த எழுதப்படாத சட்டத்திற்கு இருவர் மட்டுமே விதிவிலக்கு. ஒருவர் ஜெயலலிதா. இன்னொருவர் எம்எஸ்.விஸ்வநாதன். 

தேர்த்திருவிழா படத்தில் சூட்டிங்கின் போது ஏகப்பட்ட கூட்டம். அதைக் கலைக்க முடியவில்லை. எம்ஜிஆர் வந்து கலைந்து போகச் சொன்னார். அதற்கு ஒருவர், ‘வாத்தியாரே, நாங்க கலைஞ்சி போறோம். ஆனால் இனி ஜெயலலிதா கூட மட்டும் தான் நடிக்கணும்’ என்று சொன்னாராம்.

தேர்த்திருவிழா, புதிய பூமி, காதல் வாகனம் என வரிசையாக எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் தோல்வி அடைந்தன. அப்போது எம்ஜிஆருக்கு மாபெரும் வெற்றி தேவைப்பட்டது. அப்போது தான் சொந்தமாகத் தயாரித்தார். அதுதான் அடிமைப்பெண். ஜோடி ஜெயலலிதா. படம் செம மாஸானது. அம்மா என்றால் அன்பு என்ற பாடலை சொந்தக் குரலில் பாடினார். இந்த நீண்ட நாள் ஆசை எம்ஜிஆர் மூலமே ஜெயலலிதாவுக்கு நிறைவேறியதாம்.

கண்ணன் என் காதலன் படப்பிடிப்பில் மாடிப்படியில் இருந்து ஜெயலலிதா உருண்டு விழுவது போன்ற சீன் எடுக்கப்பட்டது. எம்ஜிஆர் அவருக்காக கயிறு கட்டி பலமுறை ஒத்திகை பார்த்த பிறகே படத்தை எடுக்க அனுமதித்தாராம்.

வெளிப்புறப் படப்பிடிப்பிலும் அவரைப் பாதுகாப்பாக அழைத்து வர கார் அனுப்புவாராம். ஜெயலலிதா மேல் தனிப்பட்ட பாசம் வைத்திருந்தாராம் எம்ஜிஆர். ஒரு கட்டத்தில் எம்ஜிஆரின் அதிக அக்கறை ஜெயலலிதாவுக்கு வெறுப்பை வரவழைத்ததாம். ஜெயலலிதா குமரிப்பெண்ணில் சைக்கிள் ஓட்டவும், தெய்வமகன் படத்தில் கார் ஓட்டவும் கற்றுக்கொண்டார்.
 

Leave a comment

Comment