TamilsGuide

க்ளூகோமா நோய் குறித்து அதிர்ச்சித் தகவல்

இலங்கை சனத்தொகையில் சுமார் 5 சதவீதமானோர் க்ளூகோமா(Glaucoma) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத்  தெரிவிக்கையில் ” நாட்டில் க்ளூகோமா நோயினால் பாதிக்கப்படுவோரின்  எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

குருட்டுத் தன்மை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக க்ளூகோமா காணப்படுகின்றது. உலகளவில்  3.54 சதவீதமானவர்களும்,  இலங்கையில் சுமார் 5 சதவீதமானோரும்  இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பும் ஓர் காணமாக உள்ளது. எனவே, அனைவரும் கண் பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் முக்கியம். நம் நாட்டில் கண் கோளாறுகளை முன்கூட்டியே கண்டறிந்து  அதனை தடுக்கக்கூடிய  திட்டங்கள் காணப்படுகின்றன” இவ்வாறு வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment