TamilsGuide

எம்.ஜி.ஆருக்கு அப்படியே ஒன்றி பலித்த வாலியின் வரிகள்.. இருந்தும் ஒன்று மட்டும் பலிக்காமல் போன பாடல்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ புகழ்பெற்ற திரைப்படப் பாடல்கள் இருந்தாலும், சில பாடல்கள் அவரை அறியாமலயே அவருக்குப் பலித்திருக்கின்றன. மேலும் இந்த பாடல்களை அவருக்காக எழுதியவர் கவிஞர் வாலி. திரைப்படங்களில் 15,000 பாடல்களுக்கு மேல் எழுதி புகழ்பெற்ற கவிஞர் வாலி அவற்றில் எம்.ஜி.ஆருக்காக பல பாடல்களை எழுதியுள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவிஞர் கண்ணதாசன் என பல கவிஞர்கள் பாடல்கள் இயற்றினாலும் வாலியின் வரிகள் சற்று ஸ்பெஷலானது. ஏனெனில் வாலி எதேச்சையாக எம்.ஜி.ஆருக்காக எழுதிய பல பாடல்கள் அவர் வாழ்வின் அங்கமாகவே மாறிப் போனது.

தெய்வத்தாய் படத்தில் இடம்பெற்ற ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னால் என்  பேச்சிருக்கும்.. கடமை அது கடமை ‘ என்ற பாடலில் எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து என்று கடமை என்று கூறனாலும் அது அப்போது அவர் திமுக வைக் குறித்தாரா.. அல்லது அவரின் வெற்றியைக் குறித்தாரா என்ற சந்தேகம் வரும். பின்னாளில் அவர் திமுக என்ற அந்த மூன்றெழுத்தில் இருந்து முடிவுரை எழுதி அஇஅதிமுகவை ஆரம்பித்தார்.

மேலும் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆணையிட்டால்‘ என்ற பாடலானது பின்னாளில் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது பொருத்தமானது. அவர் ஆணையிட்டு தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.

மேலும் எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு பின்னர் உயிர் பிழைத்த போது உருவான பாடல்தான் எங்கள் தங்கம் படத்தில் இடம்பெற்ற ‘நான் செத்துப் பொழைச்சவன்டா..‘ என்ற பாடல்.

மேலும் எம்.ஜி.ஆரே விரும்பி வாலியிடம் யோசனை தெரிவித்து அவரைப் பற்றி உருவான பாடல்தான் நேற்று இன்று நாளை திரைப்படத்தில் உருவான ‘நான் படிச்தேன் காஞ்சியிலே நேற்று‘ என்ற பாடல்.

மேலும் அவர் உடல் நலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பொழுது உருவான “இறைவா உன் மாளிகையில்“ என்ற பாடலும், “நினைத்தேன் வந்தாய் 100 வயது“ என்ற பாடல்களும் வாலியால் எதேச்சையாக எழுதப்பட்டதாம்.

ஆனால் ஒரு பாடல் மட்டும் பலிக்கவில்லையாம். அந்தப் பாடல்தான் பணம் படைத்தவன் படத்தில் இடம்பெற்ற “எனக்கொரு மகன் பிறப்பான்…“ என்ற பாடல். எம்ஜிஆருக்கு வாரிசுகள் இல்லை என்பதை இப்பாடல் பொய்யாக்கியது. இருந்த போதிலும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அவரின் வாரிசுகள் தானே..

இப்படி வாலி எம்.ஜி.ஆருக்காக எழுதிய பாடல்கள் இயல்பாகவே அவருக்குப் பொருந்திப் போயிருந்தது ஆச்சர்யமான விஷயம்.

Leave a comment

Comment