TamilsGuide

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் கைது

சர்ச்சைக்குரிய மருந்துக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால்  கைது செய்யப்படுள்ளார்.

சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் நேற்று  திணைக்களத்திற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்படுள்ளார்.

அதன்படி நேற்று நண்பகல் 12.30 மணி அளவில் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், சுமார் 8 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 சந்தேக நபர்களும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment