TamilsGuide

தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவரத் தீர்மானம்

”2024 ஆம் ஆண்டிற்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பாத்துள்ளதாக” தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” புதிய சட்டத்தை கொண்டுவந்த பின்னர் சைபர் பாதுகாப்பு அதிகார சபையை  நிறுவ தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார மாநாட்டை ஜூலை மாத இறுதியில் நாட்டில் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும்  தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, கல்வி அமைச்சின் உதவியுடன் தொழில்நுட்ப வசதிகள் அற்ற 1000 பாடசாலைகளில் 700 பாடசாலைகளுக்கு இணைய வசதிகளைப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாது கல்வி அமைச்சுடன் இணைந்து தொழில்நுட்ப அறிவைப் பெறாமலிருக்கும் 10,000 பட்டதாரிகளைத் தெரிவுசெய்து அவர்களுக்கு தொழில்நுட்ப அறிவை வழங்கும் வேலைத்திட்டம் மே மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது” இவ்வாறு கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment