TamilsGuide

விலங்குகளிடையே அதிகரித்துள்ள நோய்ப்பரவல் குறித்து எச்சரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்ப்பரவல் ஆரம்பித்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு, தர்மபுரம் பகுதியில் இவற்றின் தாக்கத்தினை அவதானிக்க முடிவதாக செய்தியாளர் தெரிவித்தார்.

வைரஸ் நோயான இந்த நோய் வெப்பமான காலநிலையின் போது கால்நடைக்கு பரவி வருகிறது. கடந்த வருடமும் குறித்த நோயின் தாக்கமானது கிளிநொச்சி மாவட்டம் அடங்கலாக வடமாகாணம் மற்றும் தென் மாகாணங்களிலும் அதிகரித்திருந்தது .

உணவில் நாட்டமின்மை, எழும்பி நடக்க முடியாத நிலை, கொப்பளங்கள் உருவாகி பெரிய காயங்கள் ஏற்படுதல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி வைத்தியர் மு.கஜரஞ்சன் அவர்களிடம் இது தொடர்பில் கேட்டபோது, குறித்த நோய்க்கான தடுப்பூசியை பதிவு செய்து பணம் செலுத்தி கால்நடை வளர்ப்பாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

எனினும் பணம் செலுத்த வேண்டிய தேவையுள்ளதால் பண்ணையாளர்கள் பதிவு செய்து பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கின்றனர்.
 

Leave a comment

Comment