TamilsGuide

பொதுஜன பெரமுன தவிர்ந்த ஏனைய கட்சிகளுடன் கூட்டணிக்குத் தயார்? - சம்பிக்க ரணவக்க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சிகளுடன் புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாக மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையிலான குறித்த சந்திப்பு ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment